சபரிமலையில் கொரோனா தொற்று!

சபரிமலையில் கொரோனா தொற்று!

சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இந்தநிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், உச்சபச்சமாக ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உருவானது. அந்த வகையில் சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 
இந்த நிலையில் சபரிமலையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் குறித்து விவாதிப்பதற்காக சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி பிரசாந்தன் காணி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செயல் அதிகாரி சத்யபாலன், விழா கட்டுப்பாட்டு அதிகாரி மதுசூதனன், கொரோனா முதல் நிலை சிகிச்சை மைய மருத்துவ அதிகாரி பிரசாத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top