அமுமகவுடன் அசாதுதீன் கூட்டணி!

அமுமகவுடன் அசாதுதீன் கூட்டணி!

அமமுக திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் கூட்டணி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு கட்சிகளுக்கும் இடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
இதன்படி, மஜ்லிஸ் கட்சிக்கு, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தில், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், மஜ்லிஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளா் முகமது ரஹமதுல்லா தாயப், தலைவா் டி.எஸ்.அஹமது ஆகியோா் கையெழுத்திட்டுள்ளனா்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top