"தல" ஃபேமஸ் ஆகும் பெல்ஜியம்!

\

ஒரு விஷயத்தை டிரெண்ட் அடிப்பதில் அஜித்தான் முன்னிலையில் உள்ளார். பெப்பர் அண்ட் சால்ட் ஸ்டைலை அவர்தான் டிரெண்ட் ஆக்கினார். அதேபோல் தற்போது பெல்ஜியம் இவரால் அதிகம் கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.

அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடந்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள அழகழகான லொகேஷன்கள் குறித்து 'விவேகம்' படக்குழுவினர் மூலம் கோலிவுட்டில் பரவ... தற்போது பல நடிகர்கள் பெல்ஜியத்திற்கு போய் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கின்றார்களாம்

விஜய் நடித்து வரும் மெர்சல், சீயான் விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் மற்றும் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படம் ஆகியவை படங்களின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெல்ஜியத்தின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமா... சுற்றுலாப்பயணிகளின் அதிக கவனத்தை யும் பெல்ஜியம் ஈர்த்து வருகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top