அதிமுக- அமமுக இணைப்பா?

அதிமுக- அமமுக இணைப்பா?

ஊடக வெளிச்சத்துக்காகவே அரசு அலுவலங்களில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அப்பாவுக்கு சிலை திறப்பதற்கு பதிலாக தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார். சசிகலா பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறிவருகிறார். அதுகுறித்து சசிகலாதான் பதில் கூற வேண்டும்.

அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். 
 
அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நமது இலக்கு அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவதுதான். தேர்தல் வெற்றி தோல்விகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை எப்படி எடுத்துக்கொண்டேனோ அதேபோலத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியை எடுத்துக் கொண்டேன்.
 
சட்டமன்றத் தேர்தலில் திமுக பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவினர் தப்பான வழிகளில் ஈட்டிய பணத்தை இறைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தேடிக் கொண்டனர். இன்னும் 5 அல்லது 6 பொதுத் தேர்தல்களை கூட நாம் சந்திக்க தயாரான வலிமையோடு இருக்கிறோம். எனவே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள். கடைசி சுவாசம் இருக்கும் வரைக்கும் இந்த டிடிவி. தினகரன் தன் இலக்கை அடைய போராடுவேன் என்றார். 
 
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- ஊடக வெளிச்சத்துக்காகவே அரசு அலுவலங்களில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அப்பாவுக்கு சிலை திறப்பதற்கு பதிலாக தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார். சசிகலா பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறிவருகிறார். அதுகுறித்து சசிகலாதான் பதில் கூற வேண்டும். அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என்று டிடிவி.தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
இதுவரை அதிமுகவை கைப்பற்றுவது தான் தனது ஒரே நோக்கம் எனவும் அதற்காகவே அமமுகவை ஆரம்பித்ததாகவும் டிடிவி. தினகரன் கூறிவந்த நிலையில் திடீரென அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top