கோடியில் சம்பளம் கேட்கும் காஜல்!

கோடியில் சம்பளம் கேட்கும் காஜல்!

காஜல் அகர்வாலுக்கு கோலிவுட், டோலிவுட்டில் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகியுள்ளது. அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். விஜய்யுடன் அவர் நடித்த மெர்சல் ஹிட்டாகியுள்ளது. 

லட்சுமி கல்யாணம் படம் மூலம் காஜல் அகர்வாலை டோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் தேஜா. அவர் தற்போது இயக்க உள்ள புதிய படத்தில் காஜல் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. தேஜா இயக்கும் படத்தின் ஹீரோ வெங்கடேஷ். அவர் சீனியர் என்பதால் அவர் ஜோடியாக நடிக்க சில கோடிகளில் சம்பளம் அளிக்குமாறு காஜல் கேட்டாராம்.

தேஜா இயக்கத்தில் ராணா, காஜல் அகர்வால் நடித்த நேனே ராஜு நேனே மந்திரி தெலுங்கு படம் ஹிட்டானது. இதையடுத்து மீண்டும் தேஜா படத்தில் நடிக்கிறார் காஜல். கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் மறுத்தனர். அப்போது காஜல் தான் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்படி நடிக்க ரூ. 2.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

காஜல் சீனியர் ஹீரோக்கள் என்றால் தெறித்து ஓடிவிடாமல் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறாராம். இது தான் டோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top