ரஜினி கட்சி துவங்கமாட்டார்...!
Posted on 11/12/2020
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷ், நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதே இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக இதையேதான் சொல்லி வருகிறார் என தெரிவித்துள்ளார்.