இறுதி கட்டத்தை நெருங்கிய பிக் பாஸ்!
Posted on 13/09/2017
இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதனால் போட்டி கடுமையாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளதால் போட்டி கடுமையாக நடந்து வருகிறது. இன்று ஒரு காரில் போட்டியாளர்கள் அமர்ந்து செல்லவேண்டும் என்று ஒரு போட்டி நடத்தப்பட்டது.
கடைசியாக இருப்பவருக்கு 10 பாயிண்ட் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் சுஜா, சினேகன், கணேஷ் ஆகியோர் இருந்தனர். அப்போது யார் வெளியேறுவது என சுஜா-சினேகன் இடையே சண்டை வெடித்தது. இதை பார்த்த கணேஷ் நான் போகிறேன் என வெளியேற்றி விட்டார். சுஜா, சினேகன் ஆகியோர் ஒரு நாள் இரவு, பகல் முழுவதும் காரிலேயே இருந்து வருகின்றனர். இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்று தெரிய வந்து விடும்.
Tags: News, Hero, Star