விதார்த் 25

விதார்த் 25

'மைனா', 'வீரம்', 'குரங்கு பொம்மை', 'காற்றின் மொழி' என பல படங்களில் நடித்த நடிகர் விதார்த், தன்னுடைய கலை உலக பயணத்தில் 25வது படமாக பெயரிடப்படாத திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

'அண்ணாதுரை' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விதார்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நடிக்கிறார். இவர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' என்ற படத்தில் நாயகி ஸ்ருதி ஹாசனின் தோழியாக அறிமுகமானவர். இவர்களுடன் நடிகர் மாரிமுத்து, விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மூணாறு ரமேஷ், 'அசுரன்' பட புகழ் நிதிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
 
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில், லொறி ஓட்டும் சாரதியான தந்தைக்கும், மின்சார சாதனங்களை பழுது நீக்கும் பணி செய்யும் மகனுக்கும் இடையேயான உறவை விவரிக்கும் திரைக்கதை. இதில் தந்தையாக நடிகர் மாரிமுத்துவும், மகனாக நடிகர் விதார்த்தும் நடிக்கிறார்கள். நடிகர் விதார்த்திற்கு பால்ய வயதிலேயே கனவு குறித்த ஒரு பிம்பம் உண்டாகிறது. அந்த பிம்பத்துடனான அமானுஷ்ய பயணமே இந்தத் திரைப்படம்.' என்றார்.
 
இதனிடையே நடிகர் விதார்த் தற்போது 'ஆயிரம் பொற்காசுகள்', 'ஆற்றல்', 'என்றாவது ஒருநாள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top