நத்தம் விஸ்வநாதனின் தேர்தல் வாக்குறுதி!

நத்தம் விஸ்வநாதனின் தேர்தல் வாக்குறுதி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நத்தம் விசுவநாதன் ஆவிச்சி பட்டியில் உள்ள பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்து வந்தார். அப்போது அவர் பேசுகையில், “நத்தம் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் சாலை சாக்கடை தெருவிளக்குகள் போன்றவை  பூர்த்தி அடைந்துள்ளன.  தமிழகத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நத்தம் பேருந்து நிலையம் சிறப்பு பெற்றுள்ளது.

மாநிலத்தில் சட்டமன்றத் தொகுதிக்கான 234 தொகுதிகளில் அம்மாவின் தொகுதிக்கு அடுத்த படியாக, இந்த நத்தம் சட்டமன்ற தொகுதி சிறப்புற்று விளங்குகிறது இந்தத் தொகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
 
மீண்டும் என்னை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள். நான், வளர்ச்சிப்பணிகளை புயல் வேகத்தில் செய்வேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top