பான் - ஆதார் இணைப்பு - ஜூலை 1 முதல் ரூ.1,000 அபராதம்!

பான் - ஆதார் இணைப்பு - ஜூலை 1 முதல் ரூ.1,000 அபராதம்!

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டை (PAN) ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ம் தேதியாக இன்று ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் ஜூலை 1 முதல் ரூ.1,000 இரட்டை அபராதம் விதிக்கப்படும். மத்திய அரசு ஏற்கனவே மார்ச் 31 வரை காலக்கெடுவை நீட்டித்த நிலையில், அதன் பிறகு, மார்ச் 31 மற்றும் ஜூன் 30, 2022 க்குள் பான் மற்றும் ஆதாரை இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும், தாமதக் கட்டணத்தை அல்லது அபார கட்டணத்தைச் செலுத்திய 4-5 நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் இணைக்கும் செயல்முறையைச் செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்தது.
 
'பான் ஆதார் இணைப்பு தொடங்கியது. 30/06/22 வரை இணைக்கப்பட்டிருந்தால் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் கட்டணம் ரூ.1,000. மேஜர் ஹெட் 0021 (நிறுவனங்களைத் தவிர மற்ற வருமான வரி) & மைனர் ஹெட் 500 (கட்டணம்) உடன் Challan No ITNS 280 மூலம் செலுத்த வேண்டிய கட்டணம். பணம் செலுத்திய நாளிலிருந்து 4-5 வேலை நாட்களுக்குப் பிறகு இணைக்க முயற்சிக்கவும், 'என்று கடந்த ஜூன் 1 அன்று மத்திய அரசு சார்பில் பதிவிட்டப்பட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top