ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை... சமுத்திரக்கனி பெருமிதம்
Posted on 10/07/2017
வாழ்நாள் சாதனை... இது வாழ்நாள் சாதனை என்று நடிகர் சமுத்திரக்கனி நெகிழ்ந்து போய் தெரிவித்துள்ளார்.
எதற்காக தெரியுங்களா? காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்ததை வாழ்நாள் சாதனையாக கருதுவதாக இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ரஜினியுடன் தோன்றும் முதல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும் பெருமையாக உணர்ந்தேன். அது எனக்கு வாழ்நாள் சாதனையாக தோன்றியது. இந்த வாய்ப்பிற்காக பல நாட்கள் காத்திருந்தேன் என்று நெகிழந்து போய் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் தாதாவாக நடித்து வரும் ரஜினிக்கு உதவுபராக சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero, Star