மீண்டும் இலவச கலர் டிவி.. ஓகே சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

மீண்டும் இலவச கலர் டிவி.. ஓகே சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

ஏழை, எளிய மக்கள் அனைவரும் வண்ண தொலைக்காட்சியில் படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகையில் பொருட்களை வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி ஆசைப்பட்டார். 

இதற்காக, 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச ‘கலர் டிவி’ வழங்கப்படும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை  கருணாநிதி அறிவித்தார். 
 
அதன்படி, 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சியில் உட்கார்ந்தவுடன் அனைத்து மக்களுக்கும் கலர் டிவியை வழங்கினார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் 2006 -2011 ம் ஆண்டு வீடு தோறும் இலவச கலர் டிவி வழங்கினார். 2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீதம் இருந்த டிவிக்களை அரசு மருத்துமனை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு வழங்கப்பட்டது.
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாள்தோறும் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தற்போது அறிவித்து கொண்டுவருகிறார். ஒரு சில நேரங்களில் அவை இலங்கை தமிழர்களுக்கும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்.
 
தற்போது இலங்கை தமிழர்களுக்கு டிவிகளை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிக்களை வழங்கினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top