எண்ணிக்கைக்கு முன் மீண்டும் வீடியோ பதிவு!

எண்ணிக்கைக்கு முன் மீண்டும் வீடியோ பதிவு!

ஓட்டு எண்ணப்படுவதற்கு முன்பாக மீண்டும் வீடியோ பதிவு செல்வது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த அறைக்கு 'சீல்' வைப்பதற்கு முன்அதிகாரிகள் மற்றும் கட்சி முகவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பதிவான ஓட்டுகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணும்முன் அறையின் 'சீல்' அகற்றப்படும்; பின்இயந்திரங்களை ஓட்டு எண்ண எடுக்கும் முன் மீண்டும் வீடியோ பதிவு செய்யப்படும்.கட்சி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சந்தேகம் எழுப்பினாலோ புகார் அளித்தாலோ சீல் வைக்கப்பட்டதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவுடன் இந்த வீடியோ ஒப்பிட்டு பார்க்கப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top