துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் கண்டனம்!

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் கண்டனம்!

அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் உள்ள மூன்று வெவ்வேறு மசாஜ்  நிலையங்களில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது சந்தேக நபர் கைதாகியிருப்பதாகவும் அவரே மூன்று இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என கருதுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கான பின்னணி அல்லது உள்நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 
இதற்கிடையே, உயிரிழந்த பெண்களில் நான்கு தங்கள் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தென் கொரியா தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
 
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
அட்லான்டா துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் கொல்லப்பட்டதற்கு பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிடவேண்டும். இனவெறி தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top