நீரா டாண்டன் பின் வாங்கினார்!

நீரா டாண்டன் பின் வாங்கினார்!

வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்றான பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை இயக்குனர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் நீரா டாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமிக்க பரிந்துரைத்தார்.

ஆனால், இவருக்கு குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்களும், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த சில எம்பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செனட்டில் 51 சதவீத எம்பி.க்கள் ஆதரித்து வாக்களித்தால் மட்டுமே, நீராவால் இப்பதவியை பெற முடியும், ஆனால், அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், நீரா தனது நியமன பரிந்துரையை வாபஸ் பெறுவதாக நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அதிபர் பைடனுக்கும் கடிதம் அனுப்பினார். அதிபர் பைடனால் பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்க முடியாமல் தோல்வி அடைந்த முதல் நபர் நீரா டாண்டன்தான். இவருக்கு பதிலாக வேறு நபரை பரிந்துரைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top