5 மாநில காங். தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - சோனியா காந்தி அதிரடி!

5 மாநில காங். தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - சோனியா காந்தி அதிரடி!

உ.பி. பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.  உ.பி., பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அங்குள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. மீதமுள்ள 92 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

உ.பி.யில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் போட்டியிட்ட 97 சதவீத இடங்களில் டெபாசிட்டை இழந்தது. பஞ்சாப் தோல்வியை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ராஜஸ்தான், சட்டீஸ்கர் என 2 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில், பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட, கோவா ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பல தலைவர்களின் பொறுப்பு பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top