த.மா.கா.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

த.மா.கா.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ள சில சிறப்பு அம்சங்கள்:
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
* திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம் பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
* மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top