பொதுக் குழுவில் வெளிச்சத்திற்கு வர சசியின் ஸ்லீப்பர் செல்கள் திட்டம்!

பொதுக் குழுவில் வெளிச்சத்திற்கு வர சசியின் ஸ்லீப்பர் செல்கள் திட்டம்!

இதனால் அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டை அணிந்தே கூட்டத்தில் பங்கேற்று கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒருவர்கூட உள்ளே வந்து விடக்கூடாது என  ஓபிஎஸ் இபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு முதல்முறையாக புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டு வழங்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் இன்று நடைபெற்று வருகிறது.
 
இதற்கிடையில், நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் எதிராகவும், சசிகலாவுக்கு ஆதரவாக கட்சியிக்கு ஒற்றைத் தலைமை வேண்டுமென சசிகலாவின் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதை எப்படி தடுப்பது என்பது குறித்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் எனும் பெயரில்  சில சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட செயலாளர்களுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல் கூட்டத்தில் பங்கேற்க உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய  அடையாள அட்டை தயார் செய்யும்படி ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். 
 
இதனால் அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டை அணிந்தே கூட்டத்தில் பங்கேற்று கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களை உறுதிசெய்து தீர்மானங்களை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதற்கான மினிட் புத்தகத்தில் கையெழுத்து பெறுவது மாவட்ட ஆட்சியர்களின் பணி என ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளன்ர. அதற்காக தனியாக ஊழியர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுக்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பல்வேறு அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொறுப்பாளர்கள் அழைக்கப்படுவது வழக்கம், ஆனால் சிறப்பு  அழைப்பாளர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டுமென  மாவட்ட செயலாளர்களுக்கு ஓபிஎஸ் இபிஎஸ்  திட்டவட்டமாக கூறியுள்ளனர். 
 
ஆனால் கட்சியில் ஒருசில மாவட்ட செயலாளர்களோ, சிறப்பு அழைப்பாளர்கள் அச்சமின்றி அழைக்கலாம் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இது தொடர்பான முடிவு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top