10 லட்சம் வழக்குகள் வாபஸ்!

10 லட்சம் வழக்குகள் வாபஸ்!

கொரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக பொது மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர்... சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படும்.
 
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போரோடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும். சில வழக்குகளை தவிர அனைத்தும் ரத்து செய்யப்படும்.
 
இ-பாஸ் முறைகேடு கவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்” என்று அவர் கூறினார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top