சசிகலா விடுதலைக்கான முன்னேற்பாடுகள்!

சசிகலா விடுதலைக்கான முன்னேற்பாடுகள்!

சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது.

பாதுகாப்பு முன்னேச்சரிக்கையை கருத்தில் கொண்டு அன்றை தினம் அதாவது ஜனவரி, 21 - 22ந் தேதியன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளல் ஏற்படாத வகையில் சசிகலாவின் தொண்டர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வராத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக விடுதலையாகும் கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமதமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி இரவு 7 மணிக்கு மற்ற கைதிகள் விடுதலை ஆவார்கள் என்றும், சசிகலாவை இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதேபோல், சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்கு ஏற்பாடு செய்திருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கர்நாடக உளவுத்துறையின் அறிக்கையின் படி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், விடுதலை நாளின் சூழலை பொறுத்து இதில் சில மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Tags: Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top