நாயகனாக களமிறங்கும் பிரபல இயக்குநர்!

நாயகனாக களமிறங்கும் பிரபல இயக்குநர்!

‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராகிய கெளதம் மேனன் அதன்பின்னர் ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘என்னை அறிந்தால்’ உட்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் நடிக்கும் படங்களில் சிலவற்றில் ஓரிரு காட்சிகளில் நடித்தும் வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘கோலி சோடா 2’ படத்தில் பொலிஸ் அதிகாரி பாத்திரத்தில் நடித்திருந்த கெளதம் மேனன், தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முழு தகவல்களுடன் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top