அஜித்துடன் இணையும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் ராஜலட்சுமி ஜோடி!

அஜித்துடன் இணையும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் ராஜலட்சுமி ஜோடி!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் டி.இமான் இசையில் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படம் ‘விஸ்வாசம்’. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் `அடிச்சு தூக்கு’ கடந்த 10ஆம் தேதி வெளியானது. விரைவில் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
 
இந்தப் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ டைட்டில் வென்ற மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷும், அவருடைய மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடியுள்ளனர்.
 
செந்தில் ராஜலட்சுமி ஜோடி தமிழ் சினிமாவின் முக்கிய பாடகர்களாக முன்னேறி வருகிறார்கள்.  இவர்கள் பாடிய செவத்த மச்சான் படல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top