மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் பேட்டி!
Posted on 18/03/2021
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயல்படுத்தக்கூடியது என்றும், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயல்படுத்த முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்துவோம். எங்களின் தேர்தல் அறிக்கையை பற்றி மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.
அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.