திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாக பார்க்கக்கூடாது!

திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாக பார்க்கக்கூடாது!

ஜனாதிபதியாக திரௌபதி  முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு அரசியலாக பார்க்க கூடாது என்றும், அது அனைவருக்குமான வாய்ப்பை உருவாக்கித் தரும் பிரதமரின் உயர்ந்த எண்ணமாக பார்க்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

ஜனாதிபதியாக திரௌபதி  முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு அரசியலாக பார்க்க கூடாது என்றும், அது அனைவருக்குமான வாய்ப்பை உருவாக்கித் தரும் பிரதமரின் உயர்ந்த எண்ணமாக பார்க்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கூறிய அவர், ஆசிரியர்கள் பாடத்தை மட்டும் கற்பிக்காமல் மாணவர்களின் மனதையும் படிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.
 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் ராஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், முன்பெல்லாம் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது என்றால் அது நமது நாட்டுக்கு வர கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிடும், ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசியை நான் ஏற்றுமதி செய்து வருகிறோம், ஆராய்ச்சியாளர்கள், அரசு, உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் என அனைவரும் சேர்ந்து செயல்பட்டதால் தான் இது சாத்தியமானது.
 
நாட்டிற்கு திடீரென 40 மில்லியன் முகக்கவசங்கள், முழு கவச உடை தேவைப்பட்டது, கொரோனா பிரச்சனை தொடங்கிய 60 நாட்களில் இந்த பொருட்கள் அனைத்தும் உற்பத்தி செய்து அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நாம்  வளர்ந்து உள்ளோம் என்றார், இதுபோன்ற நிகழ்ச்சிகள் திறமையானர்களை மேலும் திறமையானவர்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சிதான் என்றார்.திரௌபதி முர்மு குறித்து பேசிய அவர், புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண், தாமாக வளர்ந்து இன்று குடியரசுத் தலைவராக உயர்ந்துள்ளார்.
 
யார் வேண்டுமானாலும் குடியரசுத்தலைவராக வரலாம் என்பதற்கு இது ஒரு அடையாளம், இது அனைவருக்கும் நம்பிக்கையை புத்துணர்ச்சியை தரும் என்றார் கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது, பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை என அனைத்து கலைகளையும் கற்றுத் தர வேண்டும், அதுமட்டுமின்றி இக்காலத்தில் மாணவர்கள் சமூக  வலைதளங்களின் தாக்கத்தால் பல்வேறு சிந்தனைக்கு ஆளாகின்றனர். பாடத்தை தாண்டி ஆசிரியர்கள் மாணவர்கள் மனதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
அனைத்து பள்ளிகளும் மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை வாக்கு வங்கியாக பார்க்கக்கூடாது, அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற பிரதமரின் உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது என்றார். 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top