பாஜக வைக்கும் செக் - அன்புமணி செம ஷாக்!

பாஜக வைக்கும் செக் - அன்புமணி செம ஷாக்!

பாமகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முக்கிய ஃபைல்களை தூசி தட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவும் அங்கம் வகித்தது. 23 இடங்களில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பாமகவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. சட்டமன்றத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்த போது பாமக அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டது. இது அதிமுகவை அதிர்ச்சியடையச் செய்தது.
 
அதுமட்டுமல்லாமல் பாமகவுடனான கூட்டணி காரணமாகவே அதிமுக பல இடங்களில் வெற்றி பெற்றது என அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேசினார். அன்புமணியை விமர்சித்த பெங்களூர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போதே கூட்டணியிலிருந்து வெளியேறி பாமக தனித்துப் போட்டியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் தனித்து களம் கண்டது.
 
ஆளும்கட்சியை விமர்சிக்க வேண்டாம் என கட்சியினருக்கும் உத்தரவுகள் சென்ற நிலையில் பாமக தலைமையும் அதை கடைபிடித்து வருகிறது. தினம் ஒரு அறிக்கையை இருவரும் வெளியிட்டாலும் அரசை விமர்சிப்பது போன்ற தொனி தவிர்க்கப்படுகிறது. வேண்டுகோளாகவே பல அறிக்கைகள் வெளியாகின்றன.
 
வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோதும் தம்பி ஸ்டாலின் நிறைவேற்றுவார் என ராமதாஸ் கூறியதையும், அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததையும் பாஜக கவனித்து வருகிறது.
 
பாஜகவின் இந்த அணுகுமுறை மாற்றத்துக்கான முக்கிய காரணம் 2024 மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைவதற்காகவே என்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாகவே இரு கட்சிகளும் கூறிவருகின்றன. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என கணக்கு போடுகிறது பாஜக.
 
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓர் ஆண்டில் பெரிதாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழவில்லை. அத்துடன் திமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி உள்ளது. அதிமுகவோ உட்கட்சி பிரச்சினைகளாலும் தினகரன், சசிகலாவால் வாக்குகளை சிதறடித்தும் வருகிறது. எனவே பாமக தங்கள் கூட்டணியில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது.
 
பாமக மெல்ல திமுக பக்கம் நகர்வதை தடுக்க உடனடியாக முக்கிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை அளிக்க உள்ளது.

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top