மெட்ரோ ரயிலில் கட்டணத் தள்ளுபடி!
Posted on 13/04/2021
சென்னை மெட்ரோ ரயிலில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளை 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சலுகை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களுக்கு பொருந்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.