தினகரன் கமலுக்கான கட்சி சின்னங்கள்!

தினகரன் கமலுக்கான கட்சி சின்னங்கள்!

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதும், கமல்ஹாசனுக்கு டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதற்குமான காரணம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினகரனை அலையவிட்ட தேர்தல் ஆணையம்! 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது களம் கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பு மனு தாக்குதலுக்கு சில மணி நேரம் வரை டிடிவி தினகரனின் அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அத்தனை தொகுதிகளிலும் தனித்தனி சின்னத்துடன் களமிறங்க வேண்டிவருமோ என்ற சூழல் நிலவியது.
 
மல்லுகட்டுவாரா கமல்? இறுதியில் அவர் குக்கர் சின்னம் கேட்ட நிலையில் பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்தது. ஆனால் இந்த முறை டிடிவி தினகரனுக்கு ஆர்கே நகரில் அவருக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சின்னமான குக்கரே கிடைத்துள்ளது. அதேசமயம் கமல்ஹாசன் கடந்த முறை போட்டியிட்ட டார்ச் லைட் சின்னம் இந்த முறை மறுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு சின்னம் ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேசமயம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top