இப்போது எடுக்க வேண்டிய முடிவு அல்ல!
Posted on 08/02/2018
வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் தெரிவித்து இருப்பதாவது:
ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது: போக்குவரத்து உட்பட பல்வேறு பிரச்சனை தீர்வுகளுக்காக அறிஞர் விஞ்ஞானிகளை நாட உள்ளேன். பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் நாங்கள் சேர்த்துகொள்வோம். அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தீர்த்து வைக்கிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tags: News, Hero, Star