சாதனை படைக்கும் கார்த்தியின் 'சுல்தான்' பட டீஸர்

சாதனை படைக்கும் கார்த்தியின் \'சுல்தான்\' பட டீஸர்

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'சுல்தான்' படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியிருக்கிறது.

'ரெமோ' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சுல்தான்'. இதில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, நெப்போலியன், பொன்னம்பலம், 'கே ஜி எஃப்' பட புகழ் ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்திருக்கிறார்கள்.
 
'சகுனி', 'காஷ்மோரா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி' ஆகிய படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு தயாரித்திருக்கும் 'சுல்தான்' திரைப்படம் முதலில் டிஜிற்றல் தளங்களில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த திரைப்படத்தையும் பட மாளிகையில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
 
ஏப்ரல் 2ஆம் திகதியன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் பிப்ரவரி முதல் திகதி அன்று வெளியானது. 
 
'சுல்தான்' படத்தின் டீஸர் பிரம்மாண்டமாக இருப்பதால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. அதிலும் கார்த்தி பேசும் 'மகாபாரதத்தை இல்லாமல் படிச்சி பாருங்க சார்..' என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. டீஸர் வெளியாகி 24 மணி நேரங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. 
 
'கைதி', 'தம்பி' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சுல்தான்'  படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகின்றது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top