நவீன வசதிகளுடன்... புதிய பாராளுமன்றம்
Posted on 10/12/2020
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் நவீன வசதிகளுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (10.12.2020) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் பல்வேறு சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கும்.
அத்துடன் எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.