ஐசரி கணேஷின் 'குட்டி ஸ்டோரி'

ஐசரி கணேஷின் \'குட்டி ஸ்டோரி\'

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமலா பால், சாக்ஷி அகர்வால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'குட்டி ஸ்டோரி' என்ற அந்தாலஜி பாணியிலான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ எல் விஜய், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து, 'குட்டி ஸ்டோரி' என்ற பெயரில் அந்தாலஜி பாணியிலான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் நான்கு குறும்படங்களில் கௌதம் வாசுதேவ மேனன் - அமலா பால் ஒரு குறும்படத்தின் கதையின் நாயகன்- நாயகியாகவும், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் குறும்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - 'அருவி' படப்புகழ் அதிதி பாலன் ஆகியோரும்,  நடிகர்கள் வருண், அமிதாஷ் பிரதான், நடிகைகள் சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ஆகியோர் ஏனைய இரண்டு குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்கள். வேல் பிலிம் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'குட்டி ஸ்டோரி', பிப்ரவரி 12ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.
 
அந்தாலஜி பாணியிலான திரைப்படங்களுக்கே உரிய வழக்கமான வடிவமைப்புடன் 'குட்டி ஸ்டோரி' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கும் இருந்ததால், இணையவாசிகளிடம் எதிர்பார்த்த ஆதரவை விட, குறைவான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே தமிழில் 'புத்தம் புது காலை', 'பாவ கதைகள்' என அந்தாலஜி பாணியிலான திரைப்படங்கள் டிஜிற்றல் தளத்தில் வெளியாகி பார்வையாளர்களின் ஆதரவை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top