டெல்லி மாநிலத்தில் எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு!

டெல்லி மாநிலத்தில் எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு!

டெல்லி மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் (எம்எல்ஏக்கள்) ஊதியம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு சட்டப்பேரவை அந்தஸ்து உள்ளது. டெல்லி சட்டப்பேரைவயில் மொத்தமுள் 70 எம்எல்ஏக்களின் சம்பளம் மற்றும் கூடுதல் படிகள் இறுதியாக 2011 இல் திருத்தப்பட்டது.
 
இதனையடுத்து, தங்களது குடும்பம் மற்றும் அலுவலகங்களை நடத்துவதற்கு தற்போது தங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியம் போதுமானதாக இல்லை. ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தனர்.
 
அவர்களது இந்த கோரிக்கை குறித்து ஆராய, மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பி டி டி ஆச்சாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரையின் மீது மத்திய அரசு ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் அந்த அறிக்கையில் கிடப்பில் போட்டிருந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில், எம்எல்ஏக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான திருத்தப்பட்ட திட்டத்தை ஆம் ஆத்மி அரசுக்கு மீண்டும் அனுப்பியது. இந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில், தற்போது இதுகுறித்த ஜாக்பாட் அறிவிப்பை மத்திய அரசு, டெல்லி மாநில அரசுக்கு அளித்துள்ளது.
 
இதன்படி, டெல்லி மாநில எம்எல்ஏக்களின் ஊதியத்தை தற்போதுள்ள 54 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top