காலா படத்தில் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய தனுஷ்!

காலா படத்தில் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய தனுஷ்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், இந்தி நடிகை கஜோல் நடிக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. மும்பையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

மும்பை விழாவில் பேசிய தனுஷ், என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் விஐபி. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது திடீரென 'விஐபி 2' கதைக்கான ஐடியா வந்து, கதையை எழுதினேன்.

நீணட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் நடிகை கஜோல் 'வசுந்தரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது வில்லி வேடம் இல்லை. கஜோல் இப்போதும் 14 வயது பெண் போல ஆக்டிவ்வாக இருக்கிறார். சின்ன வயதில் பார்த்து வியந்த கஜோல் போன்ற நடிகையுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

ரஜினி நடிக்கும் 'காலா' படத்தை தயாரிக்கிறேன். அந்த படத்தில் சின்ன வயது ரஜினியாக நான் நடிக்கிறேன் என செய்திகள் வருகின்றன. உண்மை சொல்லப்போனால் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top