பயங்கரவாதத்தை ஒருபோதும் சிக்கக்கூடாது: இந்தியா

பயங்கரவாதத்தை ஒருபோதும் சிக்கக்கூடாது: இந்தியா

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு காணொலி வழியாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 8 முக்கிய விஷயங்களை வலியுறுத்தினார். அந்த விஷயங்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.
 
1. உலகில் ஏற்பட்டு வரும் உண்மையான மாற்றங்களை சர்வதேச நிறுவனங்கள் காண வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதன்மூலம், உலகில் அதிகார சமநிலையையும், பன்முகத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும்.
 
2. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதியுதவி உட்பட அனைத்து ஆதரவையும் ஒடுக்க வேண்டும்.
 
3. கோவிட் பெரும் தொற்றை அடுத்து ஏற்பட்டுள்ள உக்ரைன் மோதல், வளரும் நாடுகளில் சமூக-பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையை அளிக்கும் வகையில் விநியோகச் சங்கிலி சீர்படுத்தப்பட வேண்டும்; பொருளாதாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
 
4. உணவு மற்றும் மின் உற்பத்தியில் உலகம் வேகமாக முன்னேற வேண்டும். இதேபோல், சுகாதாரம், டிஜிட்டல், பசுமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 
5. காலநிலை மேம்பாடு மற்றும் காலநிலை நீதி ஆகியவற்றைப் பெறுவதற்காக பிரிக்ஸ் நாடுகள் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் இணைந்து செயல்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
6. பயங்கரவாதத்தை, குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சகிக்க மாட்டோம் என்ற செய்தியை உறுதியுடன் வெளிப்படுத்த வேண்டும்
 
7. நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் அளிக்கக்கூடியதாக சர்வதேச டிஜிட்டல் மயமாக்கம் இருக்கும்
 
8. நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை ஒருங்கிணைந்த முறையில் விரிவாக அணுக வேண்டும்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top