ஆர்யாவின் கேப்டன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்யாவின் கேப்டன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'ஃபிட்னஸ் ஸ்டார்' நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கேப்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'டெடி' படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கேப்டன்'. இதில் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் சிம்ரன், கோகுல், தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்திருக்கிறார். ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யாவின் சொந்த பட நிறுவனமான தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
 
'நாய்கள் ஜாக்கிரதை', 'டிக் டிக் டிக்', 'டெடி' என வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன், இயக்கத்தில் ஆர்யா நடித்திருப்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 'கேப்டன்' பட ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் ஆர்யாவின் தோற்றமும், அவருக்குப் பின்னணியில் உள்ள வித்தியாசமான விலங்கின் தோற்றமும் இணையவாசிகளிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top