செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் முறை!

செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் முறை!

ராஜ்யசபாவில், நடந்த விவாதத்தின்போது, பீஹார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷில் குமார் மோடி பேசியதாவது:அச்சு மற்றும் 'டிவி' ஊடகங்கள், கோடிக் கணக்கில் செலவிட்டு, நிருபர்கள் உள்ளிட்டோர் வாயிலாக, தகவல்களை சேகரிக்கின்றன. அவை சரிபார்க்கப்பட்டு, உண்மையான தகவல்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றன.

கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், அந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்கின்றன. அச்சு ஊடகங்கள் உள்ளிட்டவற்றுக்கு கிடைத்து வந்த விளம்பரம், தற்போது சமூக வலைதளங்களுக்கு மாறியுள்ளது.இதனால், அச்சு ஊடகங்கள் வருவாயை இழந்து உள்ளன. இதை தடுக்கும் வகையில், தாங்கள் பயன்படுத்தும் செய்திகளுக்கு, அச்சு ஊடகங்களுக்கு, இந்த சமூக வலைதளங்கள் கட்டணம் செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
நம் நாட்டிலும், இது போன்ற கட்டுப்பாடு வர வேண்டும். அப்போது தான், பாரம்பரியமான அச்சு ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். நம் பார்லி.,யிலும், இது தொடர்பான சட்டம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு, ராஜ்யசபா தலை வரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top