சிலிண்டர் விலை திடீர் குறைப்பு: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சிலிண்டர் விலை திடீர் குறைப்பு: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சிலிண்டர் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிலிண்டர்களில் வீட்டு சமையலுக்கு உதவும் சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் என இரண்டு வகை உள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 134 குறைக்கப்பட்டு தற்போது சென்னையில் ரூபாய் 2373 என விற்பனை செய்யப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வந்தது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி காஸ் சிலிண்டருக்கான திருத்தப்பட்ட விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வந்ததால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 134 குறைக்கப்பட்டதாக அறிவித்துள்ளதால் வணிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top