கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு'

கௌதம் கார்த்திக் நடிக்கும் \'ஆனந்தம் விளையாடும் வீடு\'

கௌதம் கார்த்திக் நடிப்பில் தயாராகும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
 
கதாசிரியர் நடிகர், இயக்குனர் என பன்முக திறமையுடன் இருக்கும் கலைஞர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'. இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிவாத்மிகா ராஜசேகர் அறிமுகமாகிறார். இவர் 'இதுதாண்டா போலீஸ்' பட புகழ் நடிகர் ராஜசேகரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பால பரணி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சித்து குமார் இசை அமைக்கிறார்.  இந்தப் படத்தை யோகி பாபு நடிப்பில் வெளியான 'தர்ம பிரபு' என்ற படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், சிவாத்மிகா ராஜசேகருடன் இயக்குனர் சேரன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, சரவணன், விக்னேஷ், மாரிமுத்து, மௌனிகா, சுஜாதா உள்ளிட்ட பல முனனணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர்கள் ஆர்யா விஜயசேதுபதி, இரா பார்த்திபன், ஆர் ஜே பாலாஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
 
கிராமிய பின்னணியில் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி உருவாகி வரும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமைக்கப்பட்டிருப்பதால், இணையத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்ப்பை பெற்று வருகிறது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top