தான்படித்த பள்ளிக்குச் செல்கிறார் நிர்மலா சீதாராமன்!
Posted on 02/02/2021
பிரதமர் மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அடுத்த சில வாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விழுப்புரத்தில் உள்ள, தான் பயின்ற பள்ளிக்கு நேரில் செல்ல உள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து விளக்கிக் கூறுவதற்காக, 15 மாநிலங்களில் நடக்கவுள்ள கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில், நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, வரும், 13ல், விழுப்புரம் மாவட்டத்தில், பா.ஜ., மகளிர் அணி நடத்தும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன், தமிழகம் செல்கிறார். இவர் பயின்ற, 'சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்' என்ற பள்ளி, விழுப்புரத்தில் தான் உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை, அந்த பள்ளியில் தான் இவர் படித்தார்.
விழுப்புரத்திற்குச் செல்லும்போது, அந்த பள்ளிக்கும் செல்ல, நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். அதை ஏற்று, தான் பயின்ற பள்ளிக்கு, நிர்மலா செல்ல உள்ளார்.