இயக்குனரான தயாரிப்பாளர்

இயக்குனரான தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் புதுமுகங்கள் நடிப்பில் தயாராகவிருக்கும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

'சுட்டகதை', 'நளனும் நந்தினியும்', 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' ஆகிய படங்களின் தயாரிப்பாளரும், தற்போது 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற பெயரில் தமிழ் திரைப்படத்தை தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன். இவர் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் சிவதுரை தயாரிக்கும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவீந்திரன் சந்திரசேகரன். இப்படத்திற்கு பிரியா மாலி இசை அமைக்கிறார்.
இதன் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
 
இதனிடையே தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன், 'மாஸ்டர்' படத்தின் முதல் காட்சியை தன்னுடன் இணைந்து பார்ப்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு மற்றும் நொறுக்குத் தீனிகளை இலவசமாக வழங்கவிருப்பதாக இணையப் பக்கத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top