நம் மாணவர்களுக்கு வேலை மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கு வாய்ப்பளிக்கும் ‘கல்வி’!

நம் மாணவர்களுக்கு வேலை மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கு வாய்ப்பளிக்கும் ‘கல்வி’!

இன்றைய வளர்ச்சிமிக்க கல்விச் சூழ்நிலையில், உலகத்தரத்திலான கல்வியை புகட்டுவதை விட, உலகின் எந்த ஒரு நாட்டின் கல்வி நம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய ஆராய்ச்சியோடு இணைந்த ஒரு கல்வியாக இருக்குமோ அதனை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தேர்வு செய்து அதனை இங்கு கொண்டு வந்து மாணவர்களுக்கும் பயிற்றுவிப்பதில் தனிச்சிறப்பு மிக்க கவனத்தை செலுத்துகின்றது கல்வி நிறுவனம்.

ஆங்கில எழுத்து, பேச்சு, திறன் மேம்பாட்டை பொறுத்தமட்டில் தொழில்சார்முறையில் தேவையான அவற்றில் பளிச்சிடுவதற்கான ஒரு ஆங்கிலப் புலமையை கல்வியின் கிளை நிறுவனமான “வாய்ஸ்” மாணவர்களுக்கு ஏற்படுத்தி தருகின்றது. அத்துடன் இந்தியாவை அடிப்படையாக கொண்ட டேலி கல்வியை வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் நிறுவன பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உலகளாவிய ஒப்பந்தங்களை வெளிநாடுகளுடன் மேற்கொண்டு டேலியின் பல்வேறு நிலைகளை அதற்கான சாப்ட்வேர் பரிமாற்றங்களுடன் மிகச்சிறப்பாக கல்வி நிறுவனம் செய்து வருகின்றது.  இத்தனை பெருமைமிக்க, பயனளிக்க கூடிய மிகப்பெரிய சாதனைகள் கல்வியின் மூலமாக செய்துவரும் திரு.S.செந்தில் குமார் அவர்களையே சாரும்.

பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு நல்ல வேலைக்கான நேர்காணலின் போது வெட்கத்தையும் கூச்சத்தையும், இனம் புரியாத தயக்கத்தையும் ஏற்படுத்தி நடுங்க வைத்து உள்ளங்கையில் வேர்க்கச் செய்வது ஆங்கிலப்புலமையும், ஆங்கிலத்தில் பேச்சுத்திறனும் இல்லாதிருக்கும் காரணம்தான்.

மதுரையின் “கல்வி” நிறுவனம் தனது “வாய்ஸ்” அமைப்பின் மூலம் இப் போது ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தி, பேசவும் எழுதவும் ஆங்கிலத்தைப் பிழையின்றிக் கற்றுக் கொடுத்து நல்ல பணி வாய்ப்புடன் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை ஒளி பொருந்தியதாக ஆக்குகின்றது. அதேப்போல தாய் நிறுவனமான “கல்வி” மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. மதுரை கே.கே. நகரில் இயங்கிவரும் கல்வி நிறுவனத்தைப் பற்றி மேலெழுந்த வாரியாக ஓரளவே நாம் அறிந்துள்ளதால், இங்கு வழங்கப்படும் முழுமையான கல்விச் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ள அதன் மேலாண்மை இயக்குனர் திரு.எஸ்.செந்தில் குமார் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

* கல்வி நிறுவனம் எப்போது துவங்கப்பட்டது?

2007-ம் ஆண்டு “கல்வி” நிறுவனம் முறையாக பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு 2வது “கல்வி”யின் கிளையாக வாடிபட்டியிலும், 2008-ம் ஆண்டின் இறுதியில் மதுரை, அண்ணா நகரிலும் நிறுவினோம். இதைத் தொடர்ந்து சோழவந்தானில் சொந்த கட்டிடம் அமைக்கப்பட்டது. தற்போது எங்கள் கல்வி நிறுவனத்திற்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் மொத்தம் 130 கிளைகள் உள்ளன. இவற்றில் எங்களின் சொந்த நிறுவனங்களாக 25-ம், எடுத்து நடத்தப்படும் நிறுவனங்களாக 105-ம் செயல்பட்டு வருகின்றன. எங்களின் கல்வி நிறுவனம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்று உயர்கல்விக்காகவும் மற்றொன்று “வாய்ஸ்” என்னும் பெயரில் ஆங்கில மேம்பாட்டிற்காகவும் நடத்தப்படுகின்றன. “வாய்ஸ்” தற்போது பதினோரு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது.

* “கல்வி” வெளிநாட்டில் கல்வி ஸ்காலர்ஷிப் பெறவும் எங்ஙனம் உதவுகிறது?

வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டுமென்கிற கனவு இன்று இருக்கும் தலைமுறையினர்களுக்கு மிகவும் எளிதாக நிறைவேறி வருகிறது. இன்று ஒருவர் வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்றால் அவர் உலகத்தில் உள்ள எந்த ஒரு பல்கலைகழகத்திலும் விண்ணப்பிக்கலாம். அப்படி அவர்கள் அனுப்பும் விண்ணப்பத்திலேயே ‘டோப்பிள், ஐயில்ஸ்’ என்ற தேர்வின் மதிப்பெண்ணும் இணைத்திருக்க வேண்டும். அதில் உலகத்தில் 90% டோஃப்பிள்கான மதிப்பெண்களையே கேட்கிறார்கள். டோஃப்பிள், ஐயில்ஸ் என்பது அயல்நாடுகளில் படிப்பதற்கான நுழைவு தேர்வு என்றும் சொல்லலாம். அவற்றில் நாம் எடுக்கும் மதிப்பெண்களைப் பொருத்தே வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, இங்கு அதற்கென பிரத்யேக பயிற்சிகள் அளித்து, அவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்த 7 தேர்வு மையங்களை வைத்திருக்கிறோம். இது மாதிரியான தேர்வு எழுதுவோர் நூறில் முப்பது பேர் எங்களின் மூலமாகவே செல்கிறார்கள். மொத்தம் 120 மதிப்பெண்களை கொண்டுள்ள இத்தேர்வில் வாசித்தல், கவனித்தல், எழுதுதல், பேசுதல் என நான்கு பிரிவுகள் உண்டு. அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். சில அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு தேவையான மதிப்பெண்கள் எவ்வளவு என முன்னரே அறிவித்திருப்பார்கள். அப்படி அவர்கள் நிர்ணயித்த மதிப்பெண்களை பெற்றுவிட்டார்களானால் அவர்களுக்கு குறைந்தது 13 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

* வாய்ஸ் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவு எவ்வாறு மேம்படுத்தப்படுகின்றது?

மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகள் அமைத்துதர வேண்டி, இங்கு நியாயமான கட்டணத்தில் டோஃப்பிள், ஜிஆர்இ, ஐயில்ஸ், ஜிமாட், டோயிக் போன்ற தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கிறோம். அதிலும் டோயிக் தேர்வுக்காக பிரத்யேகமாக வாய்ஸ் என்ற எங்களின் கல்வி நிறுவனத்தின் ஒரு அங்கமான நிறுவனம் இடிஎஸ்சின் நேரடி அங்கத்தினராக இருப்பதினால் மிகவும் சிறப்பான பயிற்சியாளர்களிடம் அவர்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இந்த நுழைவு தேர்வு எழுத ஒரு மாணவர் 11 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும், ஒருவேளை அவர்கள் தோல்வியடைந்தால், மீண்டும் 11 ஆயிரம் செலுத்திதான் அத்தேர்வினை எழுத முடியும். இதனாலேயே அந்த நுழைவுத் தேர்வுகளைப் போல மாதிரி தேர்வுகளை எங்களின் பிரத்யேக பயிற்சி இடங்களில் மூன்று அல்லது நான்கு மாதிரி தேர்வுகளை எங்களின் டெஸ்டிங் சென்டர்களில் நடத்துகிறோம். இதனால் அவர்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு பயிற்சி கிடைக்கும்.

* கல்வியின் இதர நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களைப் பற்றிக் கூறுங்கள்?

எங்கள் நிறுவனம் உலகின் மிகச்சிறந்த 40 மல்டி நேஷனல் கம்பெனிகளுடன் கல்வி வழங்குவது மற்றும் பயிற்சி அளித்தளில் டை-அப் என்னும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலமாக, மாணவர்களுக்கு வருங்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தேவைப்படுகின்ற சான்றிதழ்களை அதிகாரப் பூர்வமாக பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்கின்றோம். பல்வேறு துறைகளுக்குத் தேவையான “கல்வி” பேக்கேஜ்கள் தனிக்கவனத்துடன் பயிற்றுவிக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களுக்கே எங்களுடைய பயிற்றுனர்கள் நேரில் சென்று மிகச்சிறந்த முறையில் போதிக்கின்றார்கள்.

* மாணவர்களிடம் தலைமைப் பண்புகளை வளர்க்க செய்யப்படும் ஏற்பாடுகள் என்னென்ன?

இதனால், மாணவர்கள் மத்தியில் சர்வதேச சான்றிதழ்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, நியாயமான கட்டணத்திலும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அத்தோடு தென்தமிழகத்தில் சிறப்பாக படிக்கும் மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய நிறுவனங்களை நெருங்குவதற்கு பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு ஒரு வழிவாசல் அமைத்துதரும் ஒரு நோக்கத்தோடு தொடங்கி, தற்போது கிராமப்புறங்களில் இருக்கும் 40% பேருக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க செய்து இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள். எங்களின் 10 ஆண்டுகளின் முயற்சிப் பலனாக நிச்சயம் பெரிய நிறுவனங்களில் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே நாங்கள் தகுதியை மட்டும் மாணவர்களிடத்தில் உருவாக்குவதில்லை. ஆனால், தலைமை பண்புகளை பெரிதும் வளர்த்துவிடுகின்றோம்.

* EMBEDDED SYSTEM எனப்படுகின்ற தொழில்சார் கல்வியின் முக்கியத்துவம் என்ன?

EMBEDDED SYSTEM என்ற தொழில்நுட்பம் நாம் அன்றாடம் உபயோகிக்கும் Washing Machine, A/C, Cell phone, Calculator, TV, Computer என ஆரம்பித்து பல பரிமாணங்களோடு குழந்தைகளை விளையாடும் நவீன பொம்மைகள் வரை உள்ளது. Embedded system என்ற படிப்பை படிப்பதால் நாமே ஒரு விஞ்ஞானியாகக் கூட வர இயலும். இல்லையெனில் பல தொழில்நுட்பப் பூங்காக்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் அதிகம். Bengaluru, Chennai, Mumbai, Pune என இதற்கான வேலை வாய்ப்பு இடங்கள் அதிகம் உள்ளன. சுயமாகத் தொழில் தொடங்கும் அறிவைக் கூட நாம் இதனால் பெற முடியும். பள்ளிக் குழந்தைகள்கூட கற்றுக்கொள்ளும் வகையில் இதன் எளிமை உருவெடுத்துள்ளது என்பதே இதன் ஆச்சரியம் வயது பாகுபாடின்றி இந்த தொழில்நுட்பத்தை அனைவரும் கற்காலம்... தொழில்நுட்பவாதியாக உருவாகலாம்.

எங்களின் எதிர்காலத் திட்டமாக பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் “கல்வி” மற்றும் “வாய்ஸ்” -க்கான கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். “கல்வி”யின் விரிவாக்க திட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக நான் இதுவரை அமெரிக்கா, பேங்காக், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். கிளைகள் அமைப்பதற்கும், ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கல்வியின் அனைத்து எல்லைகளையும் ஓரளவுக்கு தொட்டுவிட்ட நாங்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் உலகின் மிக முக்கியமானதொரு கல்வி நிறுவனமாக உருவெடுப்போம் என மனப்பூர்வமாக நம்புகின்றோம்.

நல்ல தகுதி வாய்ந்த பயிற்றுனர்களுடனும் இதர வசதிகளுடனும் மிக நியாயமான கட்டணங்களுடனும் 130 கிளைகளுடனும் இயங்கும் எங்கள் ‘கல்வி‘ நிறுவனத்தில் மாணவர்கள் விருப்பமுடன் வந்துசேர்ந்து உலகத்தரமிக்க கல்விப்பயனை அடைந்திடல் வேண்டும் என்பதே அங்கள் அவா! கூடுதல் விபரங்களுக்கு S.செந்தில்குமார், மேலாண்மை இயக்குனர். அவர்களை 9597082692, 9500710004 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: News, Lifestyle, Academy, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top