எஸ். இராமச்சந்திரபுரம், கலைமகள் பள்ளி ஐம்பெரும்விழா!

எஸ். இராமச்சந்திரபுரம், கலைமகள் பள்ளி ஐம்பெரும்விழா!

கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் மணிமண்டபம், திருவுருவச்சிலை திறந்துவைத்து காவல்துறை தலைமை இயக்குநர் இராதாகிருஷ்ணன் பேச்சு! எஸ். இராமச்சந்திரபுரம், கலைமகள் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி 80 ம் ஆண்டுவிழா “கல்விவள்ளல்” அய்யா டி.கலசலிங்கம் அவர்களின் மணிமண்டபத் திறப்புவிழா, புதிய கட்டிடத் திறப்புவிழா, 100 சதவீத தேர்ச்சிபெற உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, ஆகிய ஐம்பெரும்விழா கலைமகள் பள்ளி நிர்வாகத் தலைவர், கலசலிங்கம் பல்கலைக்கழகம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி செயலர் எஸ். பழனிச்சாமி வரவேற்புரை வழங்கினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. சிவகாமிநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். அதில் பள்ளிதொடங்கி 80 ஆண்டுகளில் 37 ஆண்டுகள் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியும், 1989ல் +2 வகுப்பு அங்கீகாரம் பெற்றபின்பு 20 ஆண்டுகள் +2 வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்றதாகவும் கூறினார்.

சென்னை, காவல்துறை தலைமை இயக்குநர் கே. இராதாகிருஷ்ணன், ஐ. பி. எஸ், சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு “கல்விவள்ளல்” அய்யா டி. கலசலிங்கம் அவர்களின் மணிமண்டபம் திறந்து வைத்தும், புதிய வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்து 100 சதவீத தேர்ச்சிபெற உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டும் சான்றிதழும், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும் சான்றிதழும் வழங்கினார்.

அவர்பேசுகையில், உலகில் மனிதன் தோன்றி இன்று 5 பில்லியன் ஆண்டுகள் ஆனாலும், கடந்த 300 ஆண்டுகளுக்குள் தான், சில நாடுகளில் மாபெறும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் வளரும் நாடு, வளர்ந்த நாடு என்று பார்த்தால் இந்தியா இன்னும் வளரும் நாடு வரிசையில் தான் உள்ளது. ஆனால் முதல் மூன்று தொழிற்புரட்சிகள் ஏற்படுத்தி வளர்;ந்த நாடு இங்கிலாந்துதான். ஆனால் அமெரிக்காவில்தான் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சி, தொழிற்வளர்ச்சி அடிப்படையில் முன்னேறி இன்று முழுமையான டிஜிட்டல், கணினி வளர்ச்சி அடைந்த நாடாக வளர்ந்துள்ளது.

பாரதி சொன்னதுபோல அன்னசத்திரம், ஆலயங்கள், இவற்றிற்கும் மேலானது கல்விக்கூடங்கள் நிறுவுவது என்பதைப்போல, காமராஜர் வழியில் எஸ்.இராமச்சந்திரபுரம் ஊரில் பெரியவர்கள், தொழிலதிபர்கள், மேலும், கல்விவள்ளல் கலசலிங்கம் அவர்களுடைய முயற்சியில் கலைமகள் தொடக்கப்பள்ளி நிறுவி பின் மேல்நிலைப்பள்ளி ஆகி பல கட்டிடங்கள் நிறுவி தண்ணீர்; வசதி மாணவர்களுக்கு விளையாட்டுவசதி, சத்துணவு தொடக்கம் முதலியவற்றை தன் காலம்வரை, இவ்வூரில் தலைமுறை தலைமுறையாக வரும் பிள்ளைகளுக்கு செய்துகொடுத்த கல்விவள்ளலை பாராட்டி கல்விவள்ளல் கலசலிங்கம் துணைவியார் ஆனந்தம் அம்மாள் மணிமண்டபமும், திருஉருவச்சிலை திறப்பதில் தமக்கும், இந்த ஊருக்கும் நம் தமிழ்நாட்டிற்கும், மற்றும் இந்தியாவுக்குமே பெருமை. ஏனென்றால் இங்கு படிக்கும் சுற்றுப்புற, நம் நாட்டு மாணவர்களும் கலசலிங்கம் பல்கலையில் மேல்படிப்ப படித்து மேல்;நாடுகளுக்கு சென்று இன்று 42 நாடுகளிலும் கல்விவள்ளல் புகழ் பரப்புகின்றனர்.

எனவே “கல்வி அதனைக்கற்க பள்ளி” இதுதான் எல்லா ஊருக்கும் வேண்டும் என்று கூறினார். மேலும் மாணவர்கள் 80 ஆண்டுவிழாவில் நன்கு படித்து முதலவது மாணவனாக வெற்றி பெற்று இந்தியாவில் பல மாற்றங்களை, முன்னேற்ற வளர்ச்சிக்காக கொண்டுவரவேண்டும் என்று கூறினார். பின்பு ஆசிரியர்கள் பல ஆண்டுகள் பணியாற்றி 100 விழுக்காடு தேர்ச்சி கொடுத்தவர்களுக்கும் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய வியாபாரிகள், பொதுமக்கள், முன்னாள் மற்றும் இன்னாள் பள்ளி கல்வி நிர்வாகக்குழு தலைவர்கள், செயலர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கும் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழையும் கேடயங்களையும் பள்ளி நிர்வாகக்குழு தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

மதுரை முன்னாள் இராஜாஜி மருத்துவமனை டீன், சிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன், சென்னை ஆனந்த் இன்ஸ்டியூட் இயக்குநர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், கலசலிங்கம் பல்கலை இயக்குநர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், எஸ். அர்ஜூன்கலசலிங்கம், டி ஜி பி துணைவியார், மற்றும் பள்ளி துணைச்செயலர் பி. இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்விவள்ளல் மணிமண்டபம் திருஉருவச்சிலை திறப்பு விழா சிறப்புமலரை காவல் துறை தலைமை இயக்குநர் வெளியிட முதல் பிரதியை பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் அவர்களிடமும், மாணவர்களுக்கான சிறப்பு மலரை மாணவர்களிடமும் வழங்கினார்.

“குருசாமி மாரியம்மாள் வகுப்பறை கட்டடம் “கட்டி பள்ளிக்கு வழங்கிய சென்னை, போரூர் லதா பிளாட்ஸ் ப. குருசாமி வாழ்த்துறை வழங்கினார். காவல்துறைத்தலைவர் சுவாமிநாதன், காவல்துறைத்துணைத்தலைவர்கள், சின்னையா, முத்துச்சாமி, டி ஜி பி சகோதரர் கோவிந்தசாமி, விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மு. வேலம்மாள்,  பி. என் அண்ணாத்துரை, எம். வைகுண்டமூர்த்தி , ஊர்த்தலைவர் பி. இராமலிங்கம், கல்வி கமிட்டி உறுப்பினர்கள் மு. காளிமுத்து, கே. தர்மராஜ், கு. ஆதிநாராயணன், க. தவசியானந்தம், ஆர் மீனாட்சிசுந்தரம், வியாபாரிகள் திரு எஸ். சண்முகநாதன், சுந்தரமகாலிங்கம், எஸ். நாராயணன், எஸ். சோமகுரு, வழக்கறிஞர் ஆர். ரவிக்குமார், மற்றும் ஆ. தமிழ்ச்செல்வனம், இ. சுப்பிரமணியன்,  மாடசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாணவ, மணாவியர்களின் கலைநிகழ்சசி மற்றும் பரிசளிப்புவிழாவில் பல்கலை இயக்குநர் அர்ஜூன் கலசலிங்கம் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

கலைமகள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. சு. தனலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

Tags: News, Madurai News, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top