விமானத் துறையில் சாதிக்கலாம் வாங்க!

விமானத் துறையில் சாதிக்கலாம் வாங்க!

விமானங்களின் பயணிக்க வேண்டுமென்பதும், விமான நிலையங்களிலும், விமானங்களிலும் பணியாற்ற வேண்டுமென்பதும் ஒரு காலத்தில் பலரின் கனவு. ஆனால் இன்று அக்கனவு எட்டிவிடும் தூரத்தில்தான் உள்ளது. இந்த வான்வழி தொழில்நுட்பங்கள் வணிகமயமாதலோடு கூடிய விமானப்போக்குவரத்து துறையில் ஏற்பட்டுவரும் அபரிமித வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
 
இன்று, தமிழகத்தைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக தென்தமிழகத்தை சார்த்தவர்கள் ஏவியேஷன் துறையின்மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். பொறியியல் படிப்பிற்கு எந்தளவிலான ஒரு ஆர்வம் மாணவர்களிடத்தில் இருந்ததோ அதே அளவிலான ஆர்வம் ஏவியேஷன் துறையில்மீது செலுத்துகின்றனர். இன்று ஏவியேஷன் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், மாணவர்கள் மத்தியில் நிலவும் எண்ணம் என்ன என்பதைப் பற்றியும் அறிந்துக்கொள்ள மதுரையில் இயங்கிவரும் ஆப்டெக் ஏவியேஷன் அகாடமியின் கிளைத்தலைவர் திரு.சிவப்பிரகாஷம் அவர்களை சந்தித்து உரையாடினோம்.
 
‘இந்தியப் பொருளாதாரமானது, தற்போது ஏற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதோடு, பல புதிய விமான நிலையங்களும் உருவாகி வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் மேலாண்மை, விமானப் போக்குவரத்து சட்ட நிபுணர்கள், மேலாண்மை நிபுணர்கள் மற்றும் ஏரோநாடிகல் இன்ஜினியர்கள் ஆகிய பணி நிலைகளில், அதிகளவு மனிதவளதேவை நிலவுகிறது.
 
மேலும், விமான நிறுவனங்கள், வேறுபல புதிய தொழில்துறைகளிலும் தற்போது நுழையத் தொடங்கியுள்ளன. பல ஏரோஸ்பேஸ் தொழில் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தளவிலான வேலைவாய்ப்புகள் ஏர்லென்ஸ் நிறுவனங்களில் இருக்கவில்லை. ஆனால் இன்று இந்தியாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட ஒருவருக்கு பயிற்சியளிக்க வேண்டுமென்றால், அவர்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, அந்த நபர்க்கு சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் அதிகமான ஒரு செலவில் பயிற்சியளிக்கும் ஒரு சூழல் இருந்தது. ஏவியேஷன் மேனெஜ்மெண்ட் என்னும் ஒன்றுதான் ஏவியேஷனிற்கு அடிப்படை. எனவே, எங்களுடைய இன்ஸ்ட்யூட்டில் குறுகிய காலத்தில் முடிக்கும் வகையில் ஆறுமாத சான்றிதழ் வகுப்பை நடத்தி அவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். இதில் வாடிக்கையாளர் சேவை மேலாண்மை மற்றும் டிக்கெட்டிங் என்னும் வகுப்புகள் அடங்கும். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பயிற்சிகள் ஏர்போர்ட்டே வழங்கும்.
 
எங்களின் ஆப்டெக் நிறுவனம் உலகளவில் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் எங்களின் சான்றிதழுக்கு உலகளவில் உள்ள அனைந்து ஏர்லைன்ஸ்களிலும் நல்லதொரு வரவேற்புள்ளது. மேலும், எங்களிடம் பயின்ற மாணவர்கள் தற்போது ஏர்கார்னிவல், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர்பெகாசெஸ், இண்டீகோ போன்ற ஏர்லைன்ஸில் நல்ல சம்பளத்தில் பணியில் உள்ளனர்.
 
மாணவர்கள் மத்தியில் ஏவியேஷன் படிப்பிற்கான ஆர்வம் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்தமிழகத்தைச் சார்ந்தோர் அதிகமான ஆர்வம் காட்டிவருகிறார்கள். எனவே, அவர்கள் ஆங்கிலத்தில் சரளம் பெற ஸ்போக்கன் இங்கிஷ் வகுப்புகளையும் நடத்தி வருகிறோம்.
 
இந்த சான்றிதழ்: வகுப்பில் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம். தற்போது, ஏர்லைன் துறையில், ஏர்லைன் மேலாளர்கள், வணிக மேம்பாட்டு மேலாளர்கள், மார்க்கெடிங் மேலாளர்கள், பாதுகாப்பு மேலாளர்கள், ஆபரேஷன் மேலாளர்கள், இன்டர்நேஷனல் ரிலேஷன் மேலாளர்கள், ஏவியேஷன் சட்ட நிபுணர்கள், விமானப் போக்குவரத்து மேலாளர்கள், மனிதவளத்துறை மேலாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகிய பணி நிலைகளில் அதிக மனிதவளம் தேவைப்படுகிறது. எனவே, எங்களின் சான்றிதழ் வகுப்பு முடித்து மேற்படிப்பாக Aviation Law மற்றும் Air Transport Management ஆகிய துறைகளில் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், மேற்கூறிய பணிநிலைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க முடியும்.’ என கூறினார்.

Tags: News, Lifestyle, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top