கேட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கேட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

"கேட்" (பட்டதாரி நுண்ணறி தேர்வு) 2017 நுழைவுத் தேர்வுக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்கள், கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை "கேட்' நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், அந்தந்த மாநிலங்களில் நடத்தப்படும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் "கேட்', "டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் நடத்தப்படும் "கேட்' நுழைவுத் தேர்வை, 2017-ஆம் ஆண்டில் ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது.

தேர்வு எப்போது?
கணினி வழியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5,11,12 ஆகிய 4 தேதிகளில் நடத்தப்படும் தேர்வுக்கு ஆன்-லைன் வியாழக்கிழமை (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 4 கடைசித் தேதியாகும்.

புதிது என்ன?
தேர்வில், பொறியியல் அறிவியல் தாளில் -வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல் பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத் தாளில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை (ஏ - ஹெச் வரை) 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.jam.iitd.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

வெளிநாட்டவர்களுக்கும் அனுமதி: "கேட்' தேர்வெழுத வங்கதேசம், எத்தியோப்பியா, நேபால், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு ஆகிய 6 நாடுகளில் தேர்வு மையங்களை அமைத்து, அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத மத்திய அரசு முதல்முறையாக வழங்கியுள்ளது. இதில், தகுதி பெறுவோர் இந்தியக் கல்வி நிறுவனங்களில் சேர அனுமதி வழங்கப்பட உள்ளது.

"ஜாம் 2017' தேர்வுக்கு செப். 5 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஐ.ஐ.டி.க்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி., எம்.எஸ்சி.-எம்.டெக். படிப்புகள். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்கான "ஜாம்' நுழைவுத் தேர்வை இந்த முறை தில்லி ஐ.ஐ.டி. 2017 பிப்ரவரி 12-இல் நடத்த உள்ளது. இதற்கு செப்டம்பர் 5 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 6 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களைwww.jam.iitd.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Tags: News, Academy, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top