சாந்தி சதனில் அட்வென்சரின் கொண்டாட்டம்!

சாந்தி சதனில் அட்வென்சரின் கொண்டாட்டம்!

மதுரையில் பிரபலமான அப்பார்ட்மெண்ட்களில் சாந்தி சதன் குறிப்பிடத்தக்கதாகும். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கும் மதுரை மாநகரில் மத்தியில் மரங்கள் சூழ்ந்த இயற்கை எழிலோடு 600-ற்கும் மேற்பட்ட வீடுகளில் அனைத்து வசதிகளுடனும் மக்கள் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் வாழ்வது சாந்தி சதனின் சிறப்பம்சமாகும்.

அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக 23-07-2017 ஞாயிற்றுகிழமை வெற்றிகரமாக 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அட்வென்சர் செய்தித்தாள் கோலாகலமான அப்பார்ட்மெண்ட் கேம்பெயின் சிறப்போடு நடத்தியது. இதில் பிரபல நிறுவனங்களான SVS, GRT, Jewelone, Sony, LG, Madurai Hangers, shifa Healthy Kitchen, Thillai Masala, Iswarya Fertility Center, Indraprastham, Scoofi Ice Cream and Kavitha foods ஆகியோர் பங்குபெற்று சிறப்பித்தனர்.

இந்த நிறுவங்களோடு அட்வென்சர் சார்பாகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் முக்கிய பங்கினை வகித்த சமையல் போட்டியில் பெண்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்தினர்.

தரமான சுவையான மாவு வகைகளுக்கு - SVS!

உணவின் அறுசுவைக்கு காரணமான தரமான சத்தான மாவு வகைகளை உற்பத்தி செய்வதில் நான்காம் தலைமுறையாக முதலிடத்தை பிடித்துவரும் SVS நிறுவனம் அட்வென்சர் சார்பாக சாந்தி சதனில் நடத்திய சமையல் போட்டிக்கான முதன்மை ஸ்பான்சர்-ஆக இருந்து சிறப்பித்தது. மேலும், மலிவு விலையில் மாவு வகைகளை பிளாஸ்டிக் கூடையுடன் அள்ளித்தந்து மகிழ்வித்தது SVS.

அதோடு, அட்வென்சர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாகர் தொலைக்காட்சி குழுவினரோடு மதுரையின் பிரபல ஹெரிட்டேஜ் ஹோட்டலின் தலைமை சமையல் கலைஞர் திரு.திருப்பதி அவர்களும் சமையல் போட்டியில் பங்குபெற்ற பெண்களின் வீட்டிற்கே சென்று அவர்களின் சமையலை ருசி பார்த்து பாராட்டியது பங்குபெற்ற பெண்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதில் மிகவும் ருசியாக சமைத்து வெற்றி பெற்ற முதல் 5 பெண்களுக்கு விழாவின் நிறைவில் SVS சார்பாக சிறப்பு பரிசு அளிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், விழாவின் நிறைவில் பங்குபெற்று விழாவினை சிறப்பிக்க பெண்களுக்கான மருத்துவ சிறப்பு விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றிய ஐஸ்வர்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவ டாக்டர் திருமதி. எஸ்.சந்திரலேகா அவர்களும், சமையல் கலைஞர் திரு. திருப்பதி அவர்களும் வெற்றி பெற்ற பெண்களுக்கு சிறப்பு பரிசாக வெள்ளி நாணயங்களை வழங்கினர்.

விழாவின் தொடக்கமாக அன்றைய தினம் காலை 7 மணிக்கே ‘வாழ்வின் ரகசியமும் யோகாவின் அவசியமும்’ என்பதை விளக்கும் யோகா பயிற்சியோடு ஆரம்பமானது. யோகா மாஸ்டர் திரு.மூர்த்தி அவர்கள் கற்பித்த பயிற்சிகளை ஆர்வத்துடன் முன்வந்து செய்த பலரை பார்க்கும் போது யோகா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வெகுவாக பரவியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

எவ்வளவுதான் நாகரீகம் முன்னேற்றம் அடைந்தாலும் மக்களுக்கு ஜாதகம், ராசிபலன், திருமணப் பொருத்தம் மற்றும் தங்களின் எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைவதில்லை. அதனை கருத்தில் கொண்டு, அட்வென்சர் சார்பாக வந்த பிரபல ஜோதிடர் வாடிப்பட்டி ஆனந்தன் அவர்களை சாந்தி சதனில் வசிக்கும் மக்கள் ஆர்வமுடன் சந்தித்து தங்களின் ஜாதக பலன்களை பார்த்துச் சென்றனர்.

Jewellery Games & Jewellery Selfie - GRT & Jewelone!!!

GRT வழங்கிய “Jewellery Games” பெண்கள் அனைவரையும் தங்களின் பக்கம் கவர்ந்தது. மேலும், தங்க நகையின் எடையை கண்களால் மட்டுமே பார்த்து மதிப்பிட்டு சொல்லும் விளையாட்டில் பல பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதில் வெற்றியடைந்த பெண்மணிக்கு GRT நிறுவனம் சிறப்பு பரிசு வழங்கி மகிழ்வித்தது. Jewelone நடத்திய செல்ஃபி ஃபுரோகிராமில் பெண்கள் Jewelone நகைகளை அணிந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்கள். மேலும், GRT மற்றும் Jewelone நிறுவனங்களின் தங்கநகை சேமிப்பு திட்டத்தை பெண்கள் பலர் ஆர்வமுடன் கேட்டறிந்து அதில் இணைந்து தங்களின் சேமிப்புத்திறனை வெளிப்படுத்தினர்.

நீரில்லாமல் எண்ணெயில்லாமல் சமைக்கலாம் - Shifa Healthy Kitchen!!!

ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த தரத்திலான அதிநவீன சமையல் உபகரணங்களை மக்கள் மனங்கவரும் விதமாக காட்சிப்படுத்தியிருந்தனர். சுவை குறையாமல் சத்தான உணவுகளை நீரின்றி எண்ணெயுமின்றி சமைப்பது எப்படி என்பதை அவர்களிடம் பெண்கள் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Helath checkup - Shenbagam Diabetics & Jain Hospital

தற்போது மக்களுக்கு அவசியமாக தேவைப்படுகின்ற நீரிழிவு நோய் மற்றும் கண் பரிசோதனையை செண்பகம் டயாபடிக் சென்டர் மற்றும் ஜெயின் மருத்துவமனை நடத்தினர். பெரியவர்கள் பலரும் நீரிழிவு பரிசோதனையை செய்து கொண்டனர். குழந்தைகளும் பெண்களும் ஜெயின் மருத்துவர்களிடம் கண் பரிசோதனை செய்து பலனடைந்தனர்.

கியர் இல்லா கார் - சிவா மாருதி!

பெண்கள் முதற்கொண்டு அனைவரும் கார் ஓட்ட எளிதாக கியர் இல்லா கார்களை வரிசைப்படுத்தி மகிழ்வித்தது சிவா மாருதி. மக்களும் கியர் இல்லாத கார்களை பற்றி அறிந்துகொண்டதோடு டெஸ்ட் டிரைவ்-ம் செய்து மகிழ்ந்தனர். கியர் இல்லா கார் பலருக்கும் கார் வாங்கும் ஆசையை தூண்டிவிட்டது.

மனங்கவரும் மசாலா வகைகள் - தில்லை மசாலா!

சுவையான சமையலுக்கு தில்லை மசாலா என்பதற்கேற்ப விதவிதமான மசாலா வகைகளை குவித்திருந்தனர் தில்லை மசாலா நிறுவனத்தினர்.

மனதை மயக்கும் பொழுது போக்கு அம்சங்களோடு - Sony & LG!

விழா ஆரம்பம் முதல் மக்களை குதூகலப்படுத்தும் விதமாக தங்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்களின் மூலமாக இனிய இசையை அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வழங்கியது Sony & LG. அவர்களுடைய கண்கவரும் எலக்ட்ரானிக் சாதனங்களான 3டி டிவி, கேமரா, ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றின் அணிவரிசையை கண்டு அனைவரும் வியந்தனர்.

 

ஆடிக்கு அள்ளித்தரும் இந்ரப்ரஸ்தம்!

விதவிதமான சேலைகள், சுடிதார் மெட்டீரியல்ஸ்கள் மற்றும் அனைத்து ரக ஆடைகளையும் குவித்து அனைவரையும் அசத்தியது இந்ரப்ரஸ்தம்.

வீட்டின் உள்அலங்காரத்திற்கு - Madurai Hangers!

வீட்டை எப்படி அலங்கரிப்பது, வீட்டின் குறைவான இடத்திலும் புதுப்புது டிசைன்களோடு எவ்வாறு தனித்துவம் காட்டுவது என்பதை விளக்கியதோடு அதற்கான உபகரணங்களையும் கொண்டுவந்து வரிசைப்படுத்தியது மதுரை ஹேங்கர்ஸ் நிறுவனம்.

குழந்தைகள் குதூகலித்த குல்ஃபி ஐஸ்கிரீம்! - Scoofi Ice Creams

தங்களின் பிரத்யேக குல்ஃபி ஐஸ்கிரீம்களின் வகைகளின் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்களையும் தங்கள் வசப்படுத்தியது Scoofi. ஒரு முறை சுவைத்ததோடு இல்லாமல் மீண்டும் மீண்டும் சுவைக்க அனைவரையும் தூண்டியது Scoofi-ன் சிறப்பு.

இவர்களோடு கவிதா ஃபுட்ஸ்-ம் தங்களின் சிறப்பு உணவு வகைகளை மக்களுக்கு தயாரித்து வழங்கி அனைவரையும் மகிழ்வித்தது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அட்வென்சர் சார்பாக காலையிலும் மாலையிலும் ஸ்நாக்ஸ்களுடன் தேநீரும், மதிய உணவாக பிரியாணியும் தயிர்சாதமும் வழங்கியது அனைவரின் மனதையும் நிறைவாக்கி திருப்திபடுத்தியது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களான Dr. சந்திரலேகா மற்றும் சமையல் கலைஞர் திரு.திருப்பதி அவர்களுக்கு அட்வென்சர் சார்பாக சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டு நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top