ஜல்லிக்கட்டு குறும்படம்: மதுரையில் திருப்பரங்குன்றத்தில் வெளியீடு
Posted on 01/09/2016

ஜல்லிக்கட்டு குறித்த குறும்படம், மதுரை திருப்பரங்குன்றத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஜல்லிக்கட்டு குறித்த பாரம்பரியத்தை விளக்கும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ்நாடு வீரவிளையாட்டு மற்றும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் வி. ராஜசேகர் பேசுகையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. தமிழக அரசும் ஜல்லிக்கட்டு நடத்திட சட்டரீதியாக மேற்கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன. எனவே, வரும் தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நம்புகிறோம் என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
Tags: News, Madurai News