CEOA பள்ளியின் சிறப்புமிக்க சாதனைகள்!

CEOA பள்ளியின் சிறப்புமிக்க சாதனைகள்!

மதுரை மாவட்டத்தில் CEOA பள்ளி 10-வது மற்றும் 12-வது வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரிந்து வருகிறது. இந்த வருடம் நடந்து முடிந்த +2 பொதுத் தேர்வில் CEOA பள்ளி மாணவர்கள் அசரவைக்கும் அளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாணவர்களும் 1150 க்கு மேல் 141 மாணவர்களும் 1125 க்கு மேல் 229 மாணவர்களும் 1100 க்கு மேல் 345 மாணவர்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மேலும் இப்பள்ளி 200-க்கு 200 மதிப்பெண்களாக 166 பெற்றுள்ளது. கணிதத்தில்-79 பேரும், வேதியலில்-21, உயிரியல்-6, இயற்பியல்-2, கணிப்பொறியியல்-10, வணிகவியல்-25, கணக்குப் பதிவியல்-16, வணிகக் கணிதம்-5 மற்றும் பொருளாதாரம்-2 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் 1190/1200 என்பதே அதிகபட்ச மதிப்பெண்ணாக (அதுவும் காமர்ஸ் குரூப்பில்) இருந்து வந்தது. அந்தச் சாதனையை CEOA பள்ளியில் படித்த D. ஹேமா என்ற மாணவி 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று முறியடித்துள்ளார் (அதுவும் சயின்ஸ் குரூப் மூலம்), இதே CEOA பள்ளியின் G. போத்திக்கண்ணன் என்ற மாணவனும் Science Group-ல் படித்து 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்திருக்கிறார். இதுபற்றி இருமாணவர்களிடமும் நமது பத்திரிக்கை நடத்திய கலந்துரையாடலில் ஒருபகுதி.

1193 மதிப்பெண்கள் பெற்று மாநில சாதனை படைத்திருக்கும் D.ஹேமா

நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் நீங்கள் 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதற்கு எங்கள் பத்திரிக்கையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மதிப்பெண் பெற்றதை குறித்து உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

1193 மதிப்பெண்கள் நான் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த மதிப் பெண்கள் பெறுவதற்கு காரணம் எங்கள் CEOA பள்ளி நிர்வாகம், CEOA பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர் கொடுத்த ஊக்கமும் ஒத்துழைப்புமே ஆகும்.

தங்களின் அடுத்த இலக்கு என்ன?

நான் மருத்துவம் படித்து பொதுமக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போதுள்ள நிலைமையில் எனக்கு மருத்துவக் கலந்தாய்விற்கு 199.5 கட்-ஆப் உள்ளது. ஆனால் நீட் கட்ஆப் மூலம் தான் மருத்துவக் கலந்தாய்பு என்று சொல்லப்படுகிறது. நான் நீட் தேர்வும் நன்றாக எழுதியிருக்கிறேன். எனவே நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தாலும் அதிலும் நான் கண்டிப்பாக சிறந்த மருத்துவக் கல்லூரிக்குச் செல்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.

அடுத்து 11-ல் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மாணவி ஹேமா: இதுவரையில் மருத்துவக் கலந்தாய்விற்கு மாநில தேர்வில் எடுத்த மதிப்பெண்களே போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது நீட் தேர்வு மதிப்பெண்கள் தான் அடிப்படை என்று சொல்லப்படுகிறது. எது இப்படி இருந்தாலும் 11 மற்றும் 12 வது வகுப்புப் பாடங்கள் நன்றாக புரிந்து படிக்க வேண்டும். கான்சப் ஓரியன்டட் (concept oriented) கேள்விகள் நீட் தேர்வில் அதிக அளவில் கேட்கப்படுவதால் படிக்கும் அனைத்து பாடங்களையும் கான்சப்ட் புரிந்து படிக்க வேண்டும். இந்த ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வு மூலம் எவ்வாறு மருத்துவக் கல்லூரிகளுக்குச் சேர்க்கை நடைபெறும் என்பது தெளிவாகிவிடும் என்பதால் வருங்கால மாணவர்கள் அதற்கேற்றவாரு தங்களை தயார் செய்து கொள்ளவேண்டும். 

1200-க்கு 1190 எடுத்து அசத்திய போத்திக்கண்ணன்

வாழ்த்துக்கள் போத்திக்கண்ணன். நீங்கள் சயின்ஸ் குரூப் படித்து 1190 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறீர்கள். இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
எங்கள் பள்ளி ஆசிரியர்கள் எப்போதுமே அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றுவார்கள். எனது பொற்றோர், ஆசிரியர்கள் மற்றும் இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு மாணவனை குறித்தும் எங்கள் பள்ளி நிர்வாகம் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை என அனைத்து தரப்பு முயற்சியே எனது இந்த வெற்றிக்குக் காரணமாக கருதுகிறேன். மேலும் எனக்கு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வெட்டெண் என்ற கட்-ஆப் மதிப்பெண்ணும் 199.75 ஆக உள்ளது. எனவே தமிழகத்தில் எந்த பொறியியல் கல்லூரியிலும் எந்த பாடப்பிரிவிலும் எனக்கு எளிதாக இடம் கிடைத்துவிடும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் உள்ளேன். 
 
குறிப்பாக பத்தாவது வகுப்பு முடித்து பதினொன்றாவது வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
பத்தாவது பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்பது சிரமம் இல்லை. வகுப்பில் ஒழுங்காக கவனித்து படித்துவந்தாலே சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்கும். ஆனால் 12-ஆவது பொதுத் தேர்வை பொறுத்தவரையிலும் நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவு மதிப்பெண்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். பொதுவாக மாணவர்கள் பத்தாவது முடித்து பதினொன்றாம் வகுப்பில் நுழைந்தவுடன் அதிக சிரத்தையுடன் படிப்பதில்லை. 12-ஆவது வகுப்பு துவங்கும் போது படித்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்து விடுகின்றனர். இது அவர்களை 12-ஆம் வகுப்பில் மிகக் கடுமையாகப் பாதிப்படையச் செய்யும். யாரெல்லாம் 11-ஆம் வகுப்பிலேயே சிரத்தை எடுத்துப் படிக்கிறார்களோ அவர்களே 12-ஆம் வகுப்பிலும் சிறந்த மதிப்பெண்கள் பெறமுடிககிறது என்பதுதான் உண்மையாகும். எனவே 11-ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் முதல் நாளிலிருந்தே ஆர்வத்தோடும் அக்கறையோடும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 
 
உங்களின் அடுத்த இலக்கு என்ன?
நான் +2 வில் கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்தேன். பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக கம்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிக்ஸ் சேர்ந்து படிக்கலாம் என்று நினைக்கிறேன். இரு துறைகளிலும் நான்காண்டிற்குப் பிறகு எற்படப்போகும் நிலைமை குறித்து தகவல்களை சேகரித்து வருகிறேன். பல கல்வியாளர்கள் கூறும் கருத்துக்களையும் ஊன்றி கவனித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரையிலும் என்ன படிக்கிறோம் என்பதை விட, படிப்பதை எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் நமது எதிர்கால வாய்ப்பை தீர்மானம் செய்யும் என்று நம்புகிறேன். 
 
வரும் கல்வியாண்டிலோ அல்லது அதற்கடுத்தக் கல்வியாண்டிலோ மருத்துவக் கலந்தாய்விற்கு நீட் தேர்வைப் போலவே மத்திய அரசு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கும் பொதுத் தேர்வை அறிவிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜெ.யி.யி மெய்ன் (JEE-Main) தேர்வைப் பற்றிக் கேட்கிறீர்கள். அரசாங்கம் என்ன முடிவெடுக்கும் என்றோ, அதனால் என்ன நன்மை தீமை என்பது பற்றியோ எனக்கு அதிகம் தெரியவில்லை. ஆனால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் 11 மற்றும் 12 வது வகுப்புகளில் படிக்கும் பாடங்களை நன்றாக புரிந்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் பட்சத்தில் எந்த தேர்வை நினைத்தும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. குறிப்பாக பதினொன்றாம் வகுப்பில் சேரும் போதே எந்த பள்ளியில் ஆசிரியர்கள் நன்றாக புரியும்படி பாடம் நடத்துகிறார்கள் அங்கு எந்த அளவுக்கு பதிப்பெண்கள் இதற்கு முன் மாணவர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதனை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டியது கட்டாயம். ஏனென்றால் 10-ஆம் வகுப்புப் பாடம் போல் 11 மற்றும் 12-ஆவது வகுப்புப் பாடங்கள் எளிமையானது அல்ல. 
 
இம்மாணவர்களின் சாதனைகளை பற்றி பள்ளித் தலைவர் திரு இராஜா கிளைமாக்சு கூறியது:
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் CEOA பள்ளி மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்கள் எடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவில் பல சாதனைள் புரிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தற்போது மருத்துவக் கலந்தாய்வு NEET தேர்வை மையமாகக் கொண்டு நடைபெற உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். வரும் வருடங்களில் பொறியியல் கல்லூரி சேர்க்கையும் JEE (Main) மூலம்தான் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நாங்கள் அதற்கான சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கும் வண்ணம் ஏற்கனவேயே திட்டங்கள் தீட்டிஉள்ளோம். குறிப்பாக இந்த துறையில் வல்லுனர்களாக விளங்கும் ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் (கோட்டா) ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு ஆசிரியர்களை அழைத்து வந்துள்ளோம். எனவே NEET மற்றும் JEE(Main))/JEE(Advance) மூலமும் CEOA பள்ளி தொடர்ந்து பல சாதனைகள்புரியும் என்று உறுதியளிக்கிறோம். மதுரை மாவட்டத்திற்கான மருத்துவம், பொறியியல் மற்றும் CA உரிய பங்கினை பெற்றிட CEOA பள்ளி என்றுமே முனைந்து செயல்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

Tags: News, Academy, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top