சூப்பர் ஸ்விம்மிங் சாம்பியன் செல்வ பிரசன்னா!

சூப்பர் ஸ்விம்மிங் சாம்பியன் செல்வ பிரசன்னா!

கிராமத்துல கிணத்துலயும், குளத்துலயும் குதிச்சு நீச்சல் கத்துக்கிட்ட காலம் எல்லாம் திரும்ப கிடைக்குமாங்கிற ஏக்கம் இன்னிக்கு வந்துடுச்சு.

அதுபோக உடல் ஆரோக்கியமுங்கிறது நீச்சல் பன்றவங்களுக்கு அதிகமா கவே இருந்துச்சு. ஆனா இன் னைக்கு இளசுங்க ஸ்மார்ட் போன், வாட்ஸ் ஆஃப், கேம்ஸ்னு முங்கிட்டாங்க. இவர்களுக்கு மத்தியில் ஒரு சில இளைஞர்கள் நீச்ச லுக்குனு தனி முக்கியத்துவம் கொடுத்து சாதனை மேல் சாதனை செய்து வராங்க. அந்த வகையில் சமீபத்தில் ராஜ்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிளான நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக் கம் வென்று பெருமை சேர்த் துருக்காரு கே.கே.நகர் மகாத்மா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வ பிரசன்னா. இவரின் வெற்றிப் பாதையைப் பற்றி யும், நீச்சல் விளையாட்டில் கிடைக்கும் ஆரோக்கிய நன் மைகள் பற்றியும் அறிந்து  கொள்ள சந்தித்தோம்.

‘நீச்சல் அப்படிங்கிறது வெறும் உடல்நிலை சார்ந்தது மட்டுமல்ல, மனநிலை சார்ந் ததும் கூட..’ என எதிர்நீச்சல் போடும் வேகத்தில் துவங்குகிறார். ‘என்னுடைய ஐந்து வயதுல நீச்சல் அடிக்க துவக்கி, இன்னைக்கு பத்து வருசம் ஆச்சு. ஆனாலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒன் னொன்னு புதுசா கத்துக் கிட்டே தான் இருக்கேன்.  என்னுடைய அப்பா தான் அன்னைக்கு நீச்சல் பயிற் சிக்கு ஊக்குவித்தார். அப்போ அவரிடம் கேட் டேன், ‘ஏன் என்னை நீச்சல் கத்துக் சொல்றீங்கனு?’ அதற்கு அவர்: ‘நீ வாழ்க் கையில தவறி விழற மாதிரி இருக் கிறப்பலாம், நீச்சல எதிர் நீச்சல் போட்டு வெளி வர மாதிரி அதுல வரணும்.’ அப் படினு சொன்னாரு. அது அப்போ எனக்கு பெரிய ஊக் கமா இருந்துச்சு.

முதன்முதலில் விஜய குமார் என்பவரிடம் மாணவ ராக சேர்ந்துதான் என்னு டைய நீச்சல் பயணத்தை துவங்கினேன். நான் நான் காம் வகுப்பு படிக்கும் போது, தஞ்சாவூரில் நடை பெற்ற ஒரு போட்டியில் மூன் றாம் இடத்தை தட்டிச் சென் றேன். அது என்னுடைய கோட்ச்க்கும் என் மேல ஒரு நல்ல நம்பிக்கைய வரவைச் சுது. அதன்பின் என் மேல் அதிக அக்கறை வைச்சு சொல்லிக் கொடுக்க ஆரம் பிச்சாங்க. ஆனா ஒரு சில கார ணங்களால கொஞ்ச நாளா நான் சரியாக கவனம் செலுத் தமா இருந்தேன். அதற்கு அப்பறம் மீண்டும் சில வொர்க் அவுட், எக்சர்சை ஸ்னு உடல்நிலையை நீச்சலுக்கு ஏற்ற பக்குவமாக கொண்டு அடுத்தடுத்து மெடல் அடிக்க ஆரம்பிச் சேன்.

அதுல, சென்ட் மைக்கல் கல்வி நிறுவனம் நடத்தின மாவட்ட அளவிலான போட் டில கலந்துகிட்டு தனிப்பட்ட சாம்பியன்ஷிப், மாநில அள வில் வெள்ளி என இது வரை சுமார் 8 தேசிய அளவிலான போட்டியில பங்கேற்று அதில் 4 போட்டிகளில்  வெற்றி பெற்றிருக்கிறேன். 

சமீபத்தில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் வெள்ளி பதக்கம் வென் றேன். ஒலிம்பிக்ஸ் போறது தான் என்னுடைய கனவு. நிச் சயம் அந்த இடத்தை  சீக்கி ரம் தொட்டுடுவேனுங்கிற நம் பிக்கை இருக்கு!.’ என கூறினார்.

‘இன்று இளைஞர்கள் டிவி, வாட்ஸ் ஆஃப் என ஒரு புறம் வீட்டிலேயே முடங்கி யுள்ளனர். ஆனால் விளை யாட்டில் ஆர்வம் செலுத்தி னால் நல்ல ஒரு ஆரோக்கிய மான உடல்நிலையும் அமை தியான மனநிலையும் கிடைக்கும். அத்தோடு அவர் களின் கவனமும் தவறான பாதையில் செல்லாது’ என செல்வ பிரச்சன்னாவின் தந்தை திரு. இளமுருகன் அவர்கள் கூறினார்.

தொடர்புக்கு: 9443292867

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top