'சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு..' - சிம்பு!

\'சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு..\' - சிம்பு!

நடிகர் சிம்பு டீமானிட்டைசேஷன் திட்டம் அறிவித்து ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு டீமானிட்டைசேஷன் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழியும் எனக் கூறப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் ஏழை, நடுத்தர மக்களே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாயினர். சிறு தொழில்கள் செய்பவர்களின் தொழில் பாதிக்கப்பட்டது.

500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தங்களிடம் வைத்திருந்த சிறிதளவு பணத்தையும் மாற்றுவதற்கு பல நாட்களாக வங்கிகளில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. சில்லறைத் தட்டுப்பாட்டால் பல வேலைகள் பாதிக்கப்பட்டன. நடக்கவிருந்த பல திருமணங்கள் பணமதிப்பிழப்பால் தடைப்பட்டன.

நடிகர் சிம்புவுக்கு பிரச்சனைகள் பல வந்தாலும் பக்கத்துணையாக பல ரசிகர்கள் இருக்கிறார்கள். திறமையான நடிகரான இவர் நடிப்பு, நடனம், பாடல், இசை என பல சினிமாவில் பரிமாணம் காட்டி வருகிறார். அனிருத் இசையில் சிம்பு வெளியிட்ட பீப் சாங் பலத்த சர்ச்சைகளை உண்டாக்கியது அனைவரும் அறிந்ததே.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துவண்டுவிடாமல் படங்களுக்கு இசையமைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார். சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு இசையமைத்து வருகிறார் சிம்பு. முன்பே சிம்பு பாடல்களால் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் இப்போது மத்திய அரசை விமர்சித்து இந்தப் பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று 'தட்றோம் தூக்றோம்' என்ற படத்திற்காக சிம்பு பாடியிருக்கும் பண மதிப்பிழப்பு பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார். இதற்கு #DemonetizationAnthem என பெயரிட்டிருக்கின்றனர். பணமதிப்பிழப்பால் பாதிக்கப்படாத பெரு முதலாளிகளையும் சாடியிருக்கிறது பாடல். 

'குடிமகனா ஒத்துழைப்பு தந்தாச்சு... கண்டபடிக்கு நம்பிக்கையை வெச்சாச்சு...' எனும் வரிகள் இடம்பெறும்போது கடந்த வருடம் இதே நாளில் டீமானிட்டைசேஷனை ஆதரித்து ரஜினி, கமல் ஆகியோர் பதிவிட்ட ட்வீட்களும் வருகின்றன.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top