கின்னஸ் சாதனை நிகழ்த்தி அதிரடியாக அசத்தும் டேக்வாண்டர்ஸ்!

கின்னஸ் சாதனை நிகழ்த்தி அதிரடியாக அசத்தும் டேக்வாண்டர்ஸ்!

அதிரடியான கிக்ஸ், பன்சஸ்னு ப்ரூஸ் லீ படத்தில் வர மாதிரி நம்ம மதுரைக்குள்ள வட்டம், மாவட்டம், மாநிலம் தாண்டி இப்போ உலக சாதனைகளை சத்தமே இல்லாமல் நிகழ்த்தி வருகிறார்கள் மதுரை டேக்வாண்டோ அகாடமியின் மாணவர்கள். சமீபத்திலும் சத்தமே இல்லாமல் இரண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்திய அந்த அகாடமியின் மாஸ்டர் திரு. நாராயணன் அவர்களை சந்தித்தோம்.

கராத்தே, பாக்சிங் எல்லாம் தெரியும் இது என்ன டேக்வாண்டோ?

டேக்வாண்டோ அப்படிங்கிறது ஒரு கொரியன் மார்ஷல் ஆர்ட். சீனர்களுக்கு எப்படி கரத்தேயோ அப்படிதான் இது கொரியன்ஸ்க்கு. டேக்வாண்டோ பொருத்தவரை இது 80 சதவீதம் கால்களையும், 20 சதவீதம் கைகளைக் கொண்டு ப்ளாக்ஸால் செய்யப்படும். இந்த மார்ஷல் ஆர்ட் ஒலிம்பிக்ஸிலையும் இடம் பிடிச்சுருக்கு.

உங்களுக்கு எப்படி இந்த கலையின் மீது ஆர்வம்?

என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டின் மீது எனக்கு ஆர்வம் என்றும் இருந்தது. அதனால கல்லூரி படிப்பிற்ககாக நான் சென்னைக்கு சென்றேன். அங்கு பிட்னஸிற்காக ஜிம் செல்லலாம் என்று நினைத்தப் போது நான் வசித்த இடத்திற்கு அருகிலேயே டேக்வாண்டோ பயிற்சியளிக்கும் அகாடமி இருந்தது. எனவே, புதுமையாக இருக்கட்டுமே இதில் சேர்ந்து அப்போதே பிளாக் பெல்ட் வாங்கிவிட்டேன். அதன்பின் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய போது, பகுதி நேரமாக நான் பயின்ற அகாடமியிலேயே வகுப்புகள் எடுக்க துவங்கினேன்.

மதுரை டேக்வாண்டோ அகாடமிப் பற்றி..

சென்னையில் சுமார் 3 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு மீண்டும் என்னுடைய குடும்பத் தொழிலைப் பார்க்க வந்ததுட்டேன். அப்போ இங்கே அகாடமி தொடங்கலாமே அப்படிங்கிற எண்ணத்துல பார்ட் டைமாக கவனித்துக் கொள்ளலாம்னு தான் துவங்கினேன். தற்போது என்னிடம் சுமார் 80-90 மாணவர்கள் கத்துக்கிறாங்க. அதனால், திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் காலை இரண்டு பேட்சும், மாலை மூன்று பேட்சுமாக வகுப்புகள் நடத்தி வருகிறேன்.

பெண்கள் இது போன்ற மார்ஷல் ஆர்ட் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களா?

கண்டிப்பா! இன்னைக்கு பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் ரொம்பேவே அதிகமாயிருச்சு. மேலும், இன்னுக்கு பெரும்பாலான பெண்கள் சென்னை, பெங்களுரூ போன்ற நகரங்கள்-ல நைட் ஷூபட் வேலைக்கு போறாங்க. சில சமயங்கள்-ல தனிய வெளிய போய்ட்டு வராங்க. அவங்களுக்கு இது போன்ற தற்காப்பு கலைதான் பாதுகாப்பு. நான் இங்க மதுரையில அகாடமி தொடங்குனப்ப என்கிட்ட பசங்க மட்டும் தான் கத்துகிட்டாங்க. இப்ப சுமார் 20 பொண்ணுங்க வகுப்புக்கு வராங்க. தற்காப்பு கலை அப்படிங்கிறனாலேயே பெற்றோர்களும் சின்ன வயசுல இருந்தே பிள்ளைகளை அனுப்புராங்க. மேலும், வகுப்புக்கு வரதுக்கும் முன்னால இருந்த மனநிலைக்கும், வகுப்புல சேர்ந்து சில மாதங்களில் உள்ள மனநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் வரும்.

உங்கள் அகாடமியின் கின்னஸ் சாதனைகள் பற்றி..

கடந்த அக்டோபர் மாதம் என்னுடைய அகாடமியிலிருந்து 11 பேர், ஒரு மணி நேரத்தில் 5683 கிக்ஸ்களைச் செய்து முதல் கின்னஸ் சாதனையை நிகழ்த்தினோம். அதனைத் தொடர்ந்து 'Largest Taekwando Display'  என்னும் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் எல்லோரும் கிக்ஸ் செய்ய வேண்டும். அதில் மதுரையில் ஒரு 250 பேர் சேர்ந்து கிக்ஸ் செய்து இரண்டாம் கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியுள்ளோம்.

உங்களின் அடுத்த கட்ட இலக்கு..

தற்போது குழுக்காக பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இனி அடுத்த இலக்காக தனித்தனி நபர்களை உலக சாதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புக்கு: 8015908808

Tags: News, Coaching

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top